Home / இன்றைய செய்திகள் / (PHOTOS) வவுனியாவில் ஏ9 வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் போராட்டம்!!கஞ்சா வைத்தது இராணுவம்!!

(PHOTOS) வவுனியாவில் ஏ9 வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் போராட்டம்!!கஞ்சா வைத்தது இராணுவம்!!

unnamed (40)வவுனியாவில் ஏ9 வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் போராட்டம்: இராணுவம் கஞ்சா வைத்து ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி
ஊடக பயிற்சி ஒன்றுக்காக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஊடகவியலாளர்களை கைது செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஏ9 வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இப் போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் உள்ள ஊடகபயிற்சி ஒன்றிற்காக யாழில் இருந்து 15 ஊடகவியலாளர்கள் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு வாகனங்களில் புறப்பட்டனர். அவர்கள் பயணித்த வாகனங்களில் ஒன்றை மாங்குளம் பகுதியில் வைத்து பொலிசார் சோதனை செய்தனர்.

அதன் பின் குறித்த வாகனம் பயணித்து ஓமந்தை சோதனைச் சாவடியில் வழமையான பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அங்கு நின்ற இராணுவத்தினர் சாரதி இருக்கைப் பக்கம் சென்று வாகனத்தில் கஞ்சா இருப்பதாக கூறி குறித்த வாகனத்தில் பயணித்த 7 ஊடகவியலாளர்களையும் வாகன சாரதியையும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கைது செய்தனர்.

இது தொடர்பில் ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தியதும் அவர்களை கைது செய்த பொலிசார் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தனர். எந்தவித விசாரணைகளும் இன்றி தாம் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதாகவும் பொய்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தம்மை விடுவிக்குமாறும் ஊடகவியலாளர் ஓமந்தை பொலிசாரிடம் கோரினர்.

இதனை பொலிசார் பொருட்படுத்தாமையால் அதிகாலை 2 மணியளவில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஏ9 வீதியில் இறங்கி வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சமரச முயற்சியில் ஈடுபட்ட பொலிசார் ஊடவியலாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையும் பதிவு செய்ததுடன் சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் ஊடகவியலாளர்களை விடுதலை செய்ததுடன் சாரதியையும் வாகனத்தையும் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் கருத்துத்தெரிவிக்கையில்,

தமது பயணத்தை தடுக்கும் நோக்குடன் இராணுவத்தினர் திட்டமிட்ட ரீதியில் எமது வாகனத்தில் சிகரட் பெட்டி ஒன்றை வைத்தனர். அதனை நாம் கண்டோம். அதனுள் தான் கஞ்சா இருப்பதாக கூறி எம்மை கைது செய்தனர். அதன் பின் சிவில் உடையில் வந்த ஓமந்தை பொலிசார் எம்மை கைது செய்த போது ஊடகவியலாளர் சிலரை தாக்கியதுடன் தகாதவார்த்தைகளையும் பயன்படுத்தினர். இது தொடர்பில் தம்மால் ஓமந்தை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
unnamed (31)

unnamed (32)

unnamed (33)

unnamed (34)

unnamed (35)

unnamed (36)

unnamed (37)

unnamed (38)

unnamed (39)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: