Home / இன்றைய செய்திகள் / (PHOTOS) மாவிட்டபுரம் கந்தனின் தேர் பவனி!!

(PHOTOS) மாவிட்டபுரம் கந்தனின் தேர் பவனி!!

953333299Untitled-1வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்துசுவாமி ஆலயத்தின் வருடாந்திர தேர் உற்சவம் இன்று காலை நடைபெற்றது.

தேர் உற்சவத்தை முன்னிட்டு காலை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, 9.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை நடைபெற்று காலை 10.00 மணியளிவில் ஆறுமுக பெருமான் தேரில் ஆரோகணித்தார்.

கடந்த 2ம் திகதி காம்யோற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 24 நாட்கள் மகோற்சவ உற்சவங்கள் நடைபெற்று இன்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.

7ம் நூற்றாண்டில் தமிழகத்தின் மதுரையில் ஆட்சி புரிந்த உக்கிரப்பெருழகி மன்னனின் மகள் மாருதப்புரவல்லி. இவ் அரசி குதிரை முகத்துடன் காணப்பட்டதுடன் குண்ம நோயினாலும் வருந்தினாள்.

எல்லா வகையான வைத்தியர்களும் வைத்தியம் செய்தும் இவளுடைய நோய் தீரவில்லை. சாந்தலிங்க முனிவருடைய வழிக்காட்டலின் கீழ் அரசி கீரிமலைப் புனிதத் தீர்த்தத்தில் நீராடி மாவிட்டபுரத்தில் கோவில் கொண்டருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வரும் காலத்தில் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது.

அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா என்பது குதிரை எனப் பொருள்படும்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தர்.

விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிஸ்டை செய்யப்பட்டு கி. பி. 1795 ஆம் ஆண்டு ஆனி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்புற இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: