Home / இன்றைய செய்திகள் / 150 அடி பள்ளத்தில் விழுந்த எரிபொருள் பவுச்சர் – ரயில் போக்குவரத்து பாதிப்பு!!

150 அடி பள்ளத்தில் விழுந்த எரிபொருள் பவுச்சர் – ரயில் போக்குவரத்து பாதிப்பு!!

1204516218Untitled-1கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஒத்தேகடே பிரதேசத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுச்சர் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 9.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ப்ரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே 150 அடி பள்ளத்தில் குறித்த பவுச்சர் குடைசாய்ந்துள்ளது.

சம்பவத்தில் சாரதி மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை பவுச்சர் விழுந்த பகுதிக்கு கீழ் கொழும்பு – பதுளை ரயில் பாதை உள்ளதால், அந்தப் பாதையில் பவுச்சர் கவிழும் அபாயம் உள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வரையான ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: