Home / இன்றைய செய்திகள் / ஹரீன் பெர்ணான்டோவின் மனு தள்ளுபடி!!

ஹரீன் பெர்ணான்டோவின் மனு தள்ளுபடி!!

1185323458Untitled-1ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் மாவட்டத்துக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கலைக்கப்பட்ட ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி அம் மாவட்டத்தில் 21 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 18ஆக குறைக்கப்படவிருந்ததோடு, மொனராகலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: