Home / இன்றைய செய்திகள் / ஸ்ரீ பாத கல்லூரி சம்பவம்: 11 பயிலுனர் ஆசிரியர்கள் கைது!!

ஸ்ரீ பாத கல்லூரி சம்பவம்: 11 பயிலுனர் ஆசிரியர்கள் கைது!!

501221641பத்னை ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த மோதலில் 07 பேர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் உணவகத்தில் வைத்து வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறிவிட்டது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டவர்கள் கல்லூரியின் பயிலுனர் ஆசிரியர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயமடைந்த 07 பயிலுனர் ஆசிரியர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு இவர்கள் குறித்து கவலையடைய தேவையில்லையென கொட்டகலை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த மோதல் தொடர்பில் 11 பயிலுனர் ஆசிரியர்கள் திம்புள பத்தனை பொலிஸரால் இன்று கைது செய்யபட்டுள்ளனர்.

கைது செய்யபட்ட 11 பயிலுனர் ஆசிரியர்களும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: