Home / செய்திகள் / இந்திய செய்திகள் / ஸ்டாலின், உதயநிதி மீதான வழக்கு ஒத்திவைப்பு!!

ஸ்டாலின், உதயநிதி மீதான வழக்கு ஒத்திவைப்பு!!

869281984Untitled-1சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வேணுகோபால் ரெட்டி என்கிற தங்களின் பினாமியின் பெயருக்கு மிரட்டி வாங்கியதாக’ சென்னை ஐகோர்ட்டில் சேஷாத்ரி என்பவர் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

பின்னர் இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மற்றும் மனுதாரர் சேஷாத்ரி தரப்பில் பரஸ்பரம் சமரசம் செய்து கொண்டதாக இருவரும் ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனால் அந்த வழக்கை ஐகோர்ட்டு முடித்து வைத்தது. ஆனால் இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது குற்ற வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டாலும், மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் வக்கீல் எல்.என்.ராவ் ஆஜரானார். இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மேலும் கால அவகாசம் தேவை என மு.க.ஸ்டாலின் தரப்பு வக்கீல் அந்தியார்ஜூனா வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 31-ம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: