Home / இன்றைய செய்திகள் / விமானத்தை சுட்டு வீழ்த்தியது குறித்து சர்வதேச விசாரணை: ஐ.நா. தீர்மானத்தை உக்ரைன்-ரஷ்யா ஏற்றது!!

விமானத்தை சுட்டு வீழ்த்தியது குறித்து சர்வதேச விசாரணை: ஐ.நா. தீர்மானத்தை உக்ரைன்-ரஷ்யா ஏற்றது!!

d6af420a-08cf-4589-80d7-43a7893583a7_S_secvpfநெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பயணிகளுடன் புறப்பட்டு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், விமானம் சுடப்பட்ட இடத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும், விசாரணைக் குழு சுதந்திரமாக சென்று விசாரணை நடத்த கிளர்ச்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை உக்ரைன் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. விசாரணைக் குழுவினருக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த சம்பவத்தால் சர்ச்சையில் சிக்கியிருக்கும் ரஷ்யாவும் ஐ.நா. தீர்மானத்தை வரவேற்று, விசாரணைக்கு உதவி செய்வதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: