Home / இன்றைய செய்திகள் / விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி மீட்பு!!

விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி மீட்பு!!

2d55816c-4a61-4685-86ae-0b707b6d296f_S_secvpfஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாகோ தலைநகர் அல்கதோகாவில் இருந்து அல்ஜீரிய தலைநகர் அல்ஜீயர்சுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாலி நாட்டில் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் இருந்து ஏற்கனவே ஒரு கருப்பு பெட்டி (பிளாக் பாக்ஸ்) மீட்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2–வது கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவின் ஏர்அல்ஜீரி விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் பயணம் செய்த 118 பேரும் பலியாகினர். நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் மாலி நாட்டில் புர்கினா பாகோவின் எல்லையில் உள்ள போலி கெஸ்தி என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பிரான்ஸ், புர்கினா பாகோ, லெபனான், அல்ஜீரியா, ஸ்பெயின், கனடா, ஜெர்மனி மற்றும் லுசம்பரிக் நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர்.

இவர்களில் பிரான்சை சேர்ந்தவர்கள் மட்டும் 51 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரை பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்கள் விபத்தில் பலியான இடத்தில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: