Home / இன்றைய செய்திகள் / விடுப்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எமனான கெப் வாகனம்!!

விடுப்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எமனான கெப் வாகனம்!!

558032540Untitled-1அனுராதபுரம் – விலவ சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியுடன் கெப் வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பலியாகியுள்ளார்.

இவர் நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபில் எனத் தெரியவந்துள்ளது.

விடுமுறையில் சென்றிருந்த போதே இவர் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: