Home / இன்றைய செய்திகள் / வாழைச்சேனையில் கஞ்சாவுடன் பெண் கைது!!

வாழைச்சேனையில் கஞ்சாவுடன் பெண் கைது!!

10வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை கிராம அலுவலகர் பிரிவில் கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிறைந்துரைச்சேனை கிராம அலுவலகர் பிரிவில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இங்கு சோதனை மேற்கொண்ட போது 450 கிராம் கஞ்சாவுடன் இப்பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: