Home / இன்றைய செய்திகள் / வயலிலிருந்து ஆணின் எலும்புகள் மீட்பு!!

வயலிலிருந்து ஆணின் எலும்புகள் மீட்பு!!

15616270882வயற் காணி ஒன்றிலிருந்து மனித எலும்புகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அகுங்கல்ல, கடுவில பிரதேசத்தில் இந்த எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று (27) முற்பகல் பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலைத் தொடர்ந்து அகுங்கல்ல பொலிஸாரினால் இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த எலும்புகள் ஆண் ஒருவரினது என கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எலும்புகள் மீட்கப்பட்ட குறித்த இடத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் கயிறும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்திகக் கூடும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: