Home / இன்றைய செய்திகள் / வடக்கு ஊடகவியலாளர்களிடம் இன்று விசாரணை!!

வடக்கு ஊடகவியலாளர்களிடம் இன்று விசாரணை!!

1220007795Untitled-1ஓமந்தை சோதனைச் சாவடியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் இன்று காலை 11.00 மணியில் இருந்து 2.00 மணிவரை ஓமந்தை பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறவிருந்த ஊடக பயிற்சி நெறிக்காக சென்ற யாழ் ஊடகவியலாளர்களின் வாகனத்தில் கஞ்சா இருந்ததாக யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் 7 பேர் உட்பட வாகனத்தின் சாரதியும் தடுத்து வைக்கப்பட்டனர்.

பின்னர் ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வாகனத்தின் சாரதி மீது கஞ்சா வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ஓமந்தையில் இருந்த பொலிஸாரே தமது வாகனத்தில் கஞ்சாவை வைத்ததாகவும் அதனை தாம் அவதானித்ததாகவும் அங்கு வந்த பொலிஸார் தம்மை தரக்குரைவாக நடத்தியதுடன் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்து ஓமந்தை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இம் முறைப்பாடு தொடர்பாக ஓமந்தை பொலிஸாரினால் இன்று (29) விசாரணைக்காக குறித்த ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி இன்று முற்பகல் 11.00 மணிக்கு வருகை தந்த ஊடகவியலாளர்கள் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மதியம் 2.00 மணி வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக யாழ் ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நாம் கடந்த சனிக்கழமை அதிகாலை ஓமந்தை பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெறவுள்ளது, எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: