Home / இன்றைய செய்திகள் / லிபியா விமான நிலையத்தில் போராளிக்குழுவினர் கடும் சண்டை: ஒரே நாளில் 47 பேர் சாவு!!

லிபியா விமான நிலையத்தில் போராளிக்குழுவினர் கடும் சண்டை: ஒரே நாளில் 47 பேர் சாவு!!

03dd085b-ff58-41be-b2ad-cf6ffe3822f2_S_secvpfலிபியாவில் தலைவர் திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றுவதற்காக போராளிகள் குழுவினரிடையே கடந்த ஒரு வார காலமாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

மேற்கு நகரமான ஜின்டானில் உள்ள சக்திவாய்ந்த போராளி குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தை கிழக்கு திரிபோலி மிஸ்ரடா போராளிகள் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். துப்பாக்கி சூடும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஒரு விமானம் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தையடுத்து நேற்று மீண்டும் சண்டை ஆரம்பித்தது. 24 மணி நேரத்தில் மட்டும் 47 பேர் இறந்ததாகவும், 120 பேர் காயமடைந்ததாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

லிபியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி 2011ல் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு எழுச்சி பெற்ற போராளிகளால் மோசமான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. போராளிக் குழுக்களை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: