Home / இன்றைய செய்திகள் / லிபியாவில் 120 கேரள நர்சுகள் சிக்கித் தவிப்பு: காப்பாற்ற உதவுமாறு சுஷ்மாவுக்கு சாண்டி கோரிக்கை!!

லிபியாவில் 120 கேரள நர்சுகள் சிக்கித் தவிப்பு: காப்பாற்ற உதவுமாறு சுஷ்மாவுக்கு சாண்டி கோரிக்கை!!

a06cc061-e2bc-48f7-a7c3-41e3086a4144_S_secvpfலிபியாவின் பெங்காசி நகரில் அரசு தரப்புக்கும், இஸ்லாமிய போராளிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 59 பேர் பலியானார்கள். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் பெரும் பகுதியை இஸ்லாமிய போராளிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நேற்று பெங்காசி நகரின் மத்தியில் அரசுப் படைகள் மீது தாக்குதல் போராளிகள் தொடுத்தபோது 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டதையடுத்து அங்கு போராளிகளின் தாக்குதல் அதிகமானது. நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவதால் தலைநகர் திரிபோலியில் செயல்பட்ட தங்கள் தூதரகத்தை சனிக்கிழமையன்று அமெரிக்கா வாபஸ் பெற்றது. ஐ.நா அமைப்பும், துருக்கியும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது.

இந்நிலையில் அமைதி இழந்து காணப்படும் தலைநகர் திரிபோலியில் சிக்கியுள்ள கேரள நர்சுகள் 120 பேரை மீட்க உதவுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாவுக்கு அம்மாநில முதல் மந்திரி உம்மன் சாண்டி கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: