Home / இன்றைய செய்திகள் / லிபியாவில் இந்தியக் குடும்பம் கடத்தல்!!

லிபியாவில் இந்தியக் குடும்பம் கடத்தல்!!

73245980-22a3-471a-be98-a9e1bd41d939_S_secvpfலிபியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபியை கடந்த 2011-ம் ஆண்டில் அந்நாட்டு ராணுவம் உள்ளூர்ப் போராளிகள் குழுக்கள் உதவியுடன் பதவியிலிருந்து இறக்கி அவரது முடிவுக்கும் வழி வகுத்தது. ஆனால் அதன்பின்னர் ஆட்சியமைத்த அரசுகளால் போராளிக் குழுக்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்ட இந்த குழுக்கள் தொடர்ந்து தன்னிச்சையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.நா.வின் பாதுகாப்புப் படைகளையே இந்தக் குழுக்கள் தாக்கத் தொடங்கியதால் தங்களது துருப்புகளைக் குறைத்து வந்த ஐ.நா. அமைப்பு ஒரு கட்டத்தில் அவர்களை முற்றிலுமாக விலக்கிக் கொண்டுள்ளது.

இருப்பினும் கடந்த ஜூன் 25-ம் தேதியன்று அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே அங்கு மோசமான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

திரிபோலி விமான நிலையத்தின் உள்ளும், புறமும் நடைபெற்றுவரும் தீவிரத் தாக்குதல்களினால் அவசர காலத்தில் மக்களை வெளியில் கொண்டுவருவது என்பது இயலாத காரியமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஈராக்கில் தற்போது நடைபெற்றுவரும் ஷன்னி- ஷியா பிரிவு இனக் கலவரங்களில் கடத்தப்பட்ட 40 இந்தியத் தொழிலாளர்களை விடுவிப்பதில் இந்திய அரசுக்கு இன்னும் வெற்றி கிடைத்தபாடில்லை.

இந்த நிலையில் தற்போது வன்முறை நிறைந்த லிபியாவில் ஒரு இந்தியக் குடும்பம் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. கடத்தியவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளிவராத போதும் திரிபோலியின் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்கள் கடத்தப்பட்டதாக ஆரம்பத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனால் இவர்களை மீட்பது அரசுக்கு கடினமான காரியமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த 2011-ம் ஆண்டில் நேட்டோ துருப்புகள் மீதான வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடங்கியபோதே இந்திய அரசு லிபியாவில் இருந்து 17,000-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியது என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: