Home / இன்றைய செய்திகள் / லிபியாவில் அரசு தரப்புக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையே கடும் மோதல்: 36 பேர் பலி!!

லிபியாவில் அரசு தரப்புக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையே கடும் மோதல்: 36 பேர் பலி!!

602d0628-bc27-40e7-8264-04c09090020b_S_secvpfலிபியாவின் பெங்காசி நகரில் அரசு தரப்புக்கும், இஸ்லாமிய போராளிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 36 பேர் பலியானார்கள். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் பெரும்பகுதியை இஸ்லாமிய போராளிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இன்று போராளிகள் பெங்காசி நகரின் மத்தியில் அரசுப் படைகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

இத்தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் மோசமான தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தலைநகரான டிரிபோலியில் செயல்பட்ட தங்கள் தூதரகத்தை சனிக்கிழமையன்று அமெரிக்கா வாபஸ் பெற்றது. ஐ.நா அமைப்பும், துருக்கியும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது.

போராளிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தலைநகர் திரிபோலி அமைதியை இழந்து காணப்படுகிறது. ஆயுதங்கள் எதுவும் இல்லாததால் அந்நாட்டின் மத்திய அரசு தங்களது பிடிமானத்தை இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: