Home / இன்றைய செய்திகள் / ரஜரட்டை பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணியில்!!

ரஜரட்டை பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணியில்!!

1009864495fighthand2ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேரது வகுப்பு தடையை நீக்குமாறு கோரி அப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று (23) முற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை செல்வதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

மாணவர்களது பேரணி காரணமாக மூடப்பட்டிருந்த தாமரைத் தடாக சுற்றுவட்டம் ஊடான காலி வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் 1000 பேர் வரையில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: