Home / இன்றைய செய்திகள் / யாழ் தேவியின் யாழ்ப்பாணம் வரையான பயணம் செப்டம்பரில் ஆரம்பம்!!

யாழ் தேவியின் யாழ்ப்பாணம் வரையான பயணம் செப்டம்பரில் ஆரம்பம்!!

1148936959Untitled-1சுமார் 30 ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ். தேவி ரயில் சேவை செப்டம்பர் 15ம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதைப் புணரமைப்புப் பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவடையும் எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதை கடந்த கால அசாதாரண சூழ்நிலைகளால் முற்றாக சேதமடைந்திருந்தது.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து, 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் திகதி தாண்டிக்குளம் வரை யாழ் தேவியின் பயணத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் 2011 மே மாதம் 29ம் திகதி ஓமந்தை வரையிலும், 2013ம் ஆண்டு செப்டப்பர் மாதம் கிளிநொச்சி வரையிலும் இதன் பயணம் விஸ்தரிக்கப்பட்டது.

மேலும் இவ் வருடம் மார்ச் மாதம் பளை வரையிலும் இந்த சேவை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது யாழ்ப்பாணத்தை நோக்கிய தனது பயணத்தை யாழ் தேவி ரயில் எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: