Home / இன்றைய செய்திகள் / யாழ்ப்பாணத்தில் காண்பிக்கப்பட்ட ‘மாறுதடம்’ திரைப்படத்துக்கு பொலிஸார் திடீர் தடை!

யாழ்ப்பாணத்தில் காண்பிக்கப்பட்ட ‘மாறுதடம்’ திரைப்படத்துக்கு பொலிஸார் திடீர் தடை!

marutadamயாழ்.நகரிலுள்ள திரையரங்கு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு காண்பிக்கப்பட்ட ‘மாறுதடம்’ திரைப்படம் இடைநடுவில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது.

“சினிமா திரையரங்கில் இவ்வாறான படங்களை காண்பிக்க முடியாது என்று தெரிவித்து படத்தை இடைநடுவில் பொலிஸார் நிறுத்தினர்” என்று அந்தப் படத்தின் இயக்குநர் எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.

” ‘மாறுதடம்’ திரைப்படம் புலம்பெயர் வாழ் மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மட்டுமே வலியுறுத்துகின்றது என்றும், அதில் எந்தவிதமான அரசியலும் புகுத்தப்படவில்லை” என்றும் ரமணன் தெரிவித்தார்.

“இந்த நிலையில் உண்மையான காரணங்களின்றி திரையரங்கில் திரைப்படம் காண்பிக்க ஆரம்பித்த சமயம், அங்கு வந்த பொலிஸார் படத்துக்குத் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து நாம் பொலிஸாரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: