Home / இன்றைய செய்திகள் / ‘மோடியின் கீழ் இந்தியா’ பற்றி பேச சுப்ரமணியம் சுவாமி இலங்கை வருகிறார்!!

‘மோடியின் கீழ் இந்தியா’ பற்றி பேச சுப்ரமணியம் சுவாமி இலங்கை வருகிறார்!!

2136587323swamy3பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியம் சுவாமி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த வாரத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரும் சுப்ரமணியம் சுவாமி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் அவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் “மோடியின் கீழ் இந்தியா” என்ற தொனிப் பொருளில் உரையொன்றையும் சுப்ரமணியம் சுவாமி ஆற்றவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, மீனவர் பிரச்சினைகள் இரு தரப்பு உறவுகள் என பல்வேறு விடயங்கள் குறித்து சுப்ரமணியம் சுவாமி இலங்கைத் தலைவர்களுடன் பேசுவார் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: