Home / இன்றைய செய்திகள் / மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்!!

மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்!!

1925018577Untitled-1இலங்கை – தமிழக மீனவர்களுக்கு இடையேயான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தமிழக சட்டப்பேரவையில் கூறினார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மீனவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் ராமமூர்த்தி (விக்கிரவாண்டி) பேசியதாவது,

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை – தமிழக மீனவர்கள் இடையே இரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இதற்காக நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அதே சமயம் மீண்டும் இரு தரப்பு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது அமைச்சர் ஜெயபால் குறுக்கிட்டுப் பேசியதாவது, இலங்கை – தமிழக மீனவர்கள் இடையே இரு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இரண்டாம் முறை பேச்சுவார்த்தை நடைபெற்றபோதே தமிழக மீனவர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடைபெறாமல் போய்விட்டது.

மூன்றாம் முறையாகவும் இரு தரப்பு மீனவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். மீனவர் பிரச்சினையை அரசு தீர்க்கும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: