Home / இன்றைய செய்திகள் / மு.கா. உயர் மட்­டக்­குழு இஸ்­லா­மிய நாடு­களின் பிரதிநிதி­களை சந்­தித்­த­தற்கு காரணம்:விளக்­கு­கிறார் ஹக்கீம்!!

மு.கா. உயர் மட்­டக்­குழு இஸ்­லா­மிய நாடு­களின் பிரதிநிதி­களை சந்­தித்­த­தற்கு காரணம்:விளக்­கு­கிறார் ஹக்கீம்!!

rauffதமது தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர் மட்டக் குழு அண்­மையில் இஸ்­லா­மிய நாடுகள் அமைப்பின் செய­லாளர் நாயகம் இயாத் மதனி மற்றும் அவ்­வ­மைப்பின் முஸ்லிம் சிறு­பான்மை விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரிவின் பிரதிநிதி­களை சவூதி அரே­பி­யாவின் ஜித்தா நகரில் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யதன் நோக்கம் அவர்­க­ளுக்கு இங்கு நடந்த அண்மைக் காலச் சம்­ப­வங்­களின் கள நிலை­வ­ரங்­களின் யதார்த்­தத்தை விளக்கி முஸ்­லிம்­களின் பாது­காப்பு, இருப்பு என்­பன தொடர்­பாக அர­சாங்­கத்தின் உத்­த­ர­வா­தத்தை பெறு­வ­தற்­கான இரா­ஜ­தந்­திர ரீதி­யான அழுத்­தத்­தையும் பிர­யோ­கிப்­ப­தற்­கே­யாகும் என கட்­சியின் தலை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அமைச்­ச­ரி­னதும் மு.கா. உயர்­மட்டக் குழு­வி­னதும் சவூதி விஜ­யத்தின் போது பலம் வாய்ந்த இஸ்­லா­மிய நாடு­களின் அமைப்பின் பிரதிநிதி­களைச் சந்­தித்து உரை­யா­டிய விவ­காரம் பற்றி சில செய்தி ஊட­கங்கள் பிரஸ்­தா­பித்­தி­ருந்­தன.

அவ்­வா­றான செய்­திகள் வெளி­யா­கி­ய­தை­ய­டுத்து தங்­க­ளது கலந்­து­ரை­யா­டலில் எந்த வித­மான மறை­முகத் தன்­மையும் இல்லை என தெரி­வித்த அமைச்சர் ஹக்கீம் முஸ்­லிம்­களின் அதி­க­பட்ச ஆணையைப் பெற்ற அர­சியல் கட்­சியின் தலைவர் என்ற முறை­யி­லேயே தாம் கட்­சியின் குழு­விற்கு தலைமை தாங்­கி­ய­தா­கவும் கூறினார். அமைச்சர் என்ற முறையில் தாம் அக் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­ட­வில்­லை­யென்றும் அவர் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இஸ்­லா­மிய நாடு­களின் அமைப்பு பல்­வேறு நாடு­களின் அர­சாங்­கங்­க­ளுடன் நல்­லு­றவைப் பேணி வரு­கின்­றது. இலங்கை அர­சாங்­கத்­து­டனும் அது சிநே­க­பூர்­வ­மான நல்­லெண்ணத் தொடர்­பு­களை கொண்­டுள்­ளது.

அந்த அமைப்பில் அங்­கத்­துவம் வகிக்கும் இஸ்­லா­மிய நாடுகள் ஜெனி­வாவில் கூட இலங்கை அர­சாங்­கத்­திற்குச் சார்­பான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருந்­தன.

ஆனால் சென்ற ஜெனிவா மாநாட்டின் போது ஜோர்தான் குவைத் ஆகிய நாடுகள் இலங்­கைக்குச் சார்­பாக வாக்­க­ளிக்­காமல் தவிர்த்­துக்­கொண்­டதன் கார­ணங்கள் பற்றி போதிய தெளிவு இல்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இங்கு மேற்­கொள்­ளப்­படும் தாக்­கு­தல்கள் அல்­லது மேற்கு நாடு­களின் அழுத்தம் என்­பன அதற்­கான கார­ண­மாக இருக்­கலாம்.

இஸ்­லா­மிய நாடுகள் அமைப்பில் சிறு­பான்­மை­யி­ன­ராக வசிக்கும் முஸ்­லிம்­களைப் பற்­றிய பிரிவு ஒன்று செயல்­ப­டு­வ­தோடு பல்­வேறு நாடு­களில் இஸ்­லா­மி­யர்கள் மீதான பீதி மனப்­பான்­மையின் விளை­வாக மேற்­கொள்­ளப்­படும் செயற்­பா­டு­களை கண்­கா­ணிக்கும் தனி­யான மையம் ஒன்றும் உள்­ளது. அந்தப் பிரி­வுகள் உல­க­ளா­விய ரீதியில் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் செயல்­பா­டு­களை உன்­னிப்­பாகக் கண்­கா­ணித்து வரு­கின்­றன. இஸ்­லா­மிய நாடுகள் அமைப்பு ரஷ்யா சீனா போன்ற நாடு­களின் அர­சாங்­கங்­களின் மீதும் இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தனது அழுத்­தத்தை உரிய முறையில் பிர­யோ­கித்து வரு­கின்­றது.

மியன்மார் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கு விசேட தூதுவர் ஒரு­வரை இவ்­வ­மைப்பு நிய­மித்­துள்­ளது. முன்னாள் மலே­சிய இரா­ஜ­தந்­தி­ரி­யொ­ருவர் அவ்­வாறு விசேட தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இலங்­கைக்கும் அவ்­வா­றான விசேட தூதுவர் ஒரு­வரை நிய­மிப்­பது பற்றி அவ்­வ­மைப்பு பரி­சீ­லித்து வரு­கின்­றது. அத்­துடன் அதன் செய­லாளர் நாயகம் இயாத் மதனி இலங்­கைக்­கான நல்­லெண்ண விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ளவும் எண்­ணி­யுள்ளார்.

அத்­துடன் அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதத்தில் அங்கு நடை­பெற தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள சமய நல்­லி­ணக்க மாநாட்­டிற்கு இலங்­கை­யி­லி­ருந்தும் சகல சம­யங்­க­ளையும் சேர்ந்த பிரதி நிதி­களை அழைப்­ப­தற்கும் இஸ்­லா­மிய நாடு­களின் அமைப்பு உத்­தே­சித்­துள்­ளது.

சிறு­பான்­மை­யி­ன­ராக முஸ்­லிம்கள் வாழும் நாடு­களில் அவர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் செயல்­பா­டுகள் குறித்து இவ்­வ­மைப்பின் கவனம் வெகு­வாக ஈர்க்­கப்­பட்­டுள்­ளது.
ஐ.நா. மனித உரிமை சாச­னத்தை அங்­கீ­க­ரித்து ஏற்றுக் கொண்­டுள்ள நாடுகள் அந்த சாச­னத்­திற்கு மாற்­ற­மாக செயல்­பட முடி­யாது.

எடுத்­துக்­காட்­டாக காஸாவில் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக இஸ்ரேல் தொடுத்­துள்ள மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை இன்னும் தொடர விட்டால் நாட்­டையே முற்­றாக அழித்­தொ­ழித்து நாச­மாக்கி விடு­வார்கள்.

ஆகையால் முஸ்­லிம்கள் மீதான பீதி மனப்­பான்­மையின் விளை­வாக கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள அநி­யா­யங்­க­ளுக்கு முடிவு காண்­ப­திலும் சம்­பந்­தப்­பட்ட நாடு­களின் அர­சாங்­கங்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்­துடன் பேசி வெவ்­வேறு சம­யங்­களை பின்­பற்­று­வோர்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வை வளர்ப்பதிலும் இஸ்லாமிய நாடுகள் அமைப்பு கூடுதல் கவனஞ் செலுத்தி வருகின்றது.

ஞானசாரதேரர் மியன்மாருக்குச் சென்று அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதும் பார தூரமான விடயமொன்றாகும் என்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச் சர் ஹக்கீமுடன் கட்சியின் உதவி செய லாளர் நாயகம் நிசாம் காரியப்பர், சர்வதேச விவகார பணிப்பாளர் எம்.பாயிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பி னர் ஏ.எம். ஜெமீல் ஆகியோரும் ஜித்தா சென்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: