Home / இன்றைய செய்திகள் / முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு வறுமை: தூக்கிட்டு தற்கொலை!!

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு வறுமை: தூக்கிட்டு தற்கொலை!!

3508365hanging2அக்மிமன பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காலி, விலேவத்த, ஹாலிவல பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிலேயே குறித்த பிரதேசசபை உறுப்பினர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

59 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொருளாதார பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: