Home / இன்றைய செய்திகள் / மீள்குடியேற்றத்தில் உதவக்கோரி சம்பூர் மக்கள் மனு!!

மீள்குடியேற்றத்தில் உதவக்கோரி சம்பூர் மக்கள் மனு!!

614098903Untitled-1திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் பொருளாதார முதலீட்டு வலயத்திற்கு என அடையாளம் காணப்பட்ட காணிகள் தவிர ஏனைய காணிகளில் மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு சம்பூர் மக்கள் வலியுறுத்தி கேட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வா ஊடாக ஜனாதிபதிக்கு இந்த மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எட்டு வருடங்களுக்கு மேலாக தீர்வு இன்றி தொடரும் தங்களது மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி உதவ வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு போர் காரணமாக தமது பிரதேசத்திலிருந்து வெளியேறிய சம்பூர் பிரதேச மக்கள் போர் முடிவடைந்த பின்னரும் மீள்குடியேற்றம் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்கள் உட்பட தற்காலிக குடியிருப்புகளிலே தங்கியுள்ளார்கள்.

சொந்த மண்ணில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி 2007ஆம் ஆண்டு ஜுலை மாதம் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட காலந்தொட்டே இவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ள போதிலும் சாதகமான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை.

சம்பூர் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் என்றும் பொருளாதார முதலீட்டு வலயம் என்றும் வர்த்தமானி பிரகடனம் மூலமாக அரசாங்கத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: