Home / இன்றைய செய்திகள் / மீனவர் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வுக்கு முயற்சி – சுஷ்மா உறுதி!!

மீனவர் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வுக்கு முயற்சி – சுஷ்மா உறுதி!!

2073424796radhakrishnan3மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். அப்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

கடந்த மாதம் முதலாம் திகதி ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேரும் அவர்களது 6 படகுகளும் சிறை பிடிக்கப்பட்டது. இதில் மீனவர்கள் மட்டும் விடுதலையாகி உள்ளனர்.

மேலும் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது 29 படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இதேபோல் கடந்த 29 மற்றும் 5ஆம் திகதிகளில் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களும் 7 படகுகளும் விடுவிக்கப்படவில்லை.

எனவே இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை உடனே விடுதலை செய்யவும், படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கு முயற்சி எடுக்கப்படும் என்றும் சுஷ்மா சுவராஜ் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: