Home / இன்றைய செய்திகள் / மீண்டும் அப்பாவாக நடிக்கும் அஜீத்!!

மீண்டும் அப்பாவாக நடிக்கும் அஜீத்!!

a2256d20-dd1a-432a-9e84-d944243e16f0_S_secvpfஅஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா இருவரும் நடிக்கின்றனர்.

‘வரலாறு’, ‘அசல்’ ஆகிய படங்களில் அப்பாவாக நடித்துள்ள அஜீத் இப்படத்திலும் அப்பா வேடத்தில் நடிக்கிறாராம். இதில் சின்ன பெண் குழந்தையின் அப்பாவாக வருகிறாராம். ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களுக்கு மீண்டும் அஜீத்துடன் இணைந்துள்ள திரிஷா இக்குழந்தையின் அம்மாவாக நடிக்கிறாராம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: