Home / இன்றைய செய்திகள் / ‘மாறு தடம்’ திரைப்படம் திரையிடப்படாது தடுக்கப்பட்டமை குறித்து, இயக்குநர் ரமணதாஸ் கருத்து..!

‘மாறு தடம்’ திரைப்படம் திரையிடப்படாது தடுக்கப்பட்டமை குறித்து, இயக்குநர் ரமணதாஸ் கருத்து..!

maaruthadam_041சுவிஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் மக்களும், இலங்கைக் கலைஞர்களும் இணைந்து நடித்த மாறுதடம் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நிலையில் இடைநடுவில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் ‘மாறு தடம்’ திரைப்படம் யாழ் திரையரங்கில் நேற்றுமாலை 4மணியளவில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த பொலீசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் திரு.ரமணதாஸ் அவர்களிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்டது,

இதற்கு பதிலளித்த திரு ரமணதாஸ் அவர்கள்…,
“யாழ். ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது ‘மாறு தடம்’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் முதலில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். படத்தில் எந்த ஒரு அரசியல் சார்ந்த கருத்துக்களோ, அரசியல் சார்பு நிகழ்வுகளோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் அங்கு வந்த பொலீசாருக்கு தெளிவுபடுத்திய போதிலும், படத்தை திரையிடுவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கவில்லையென பொலீசாரினால் காரணம் கூறப்பட்டு படம் இடைநிறுத்தப்பட்டது.

வீடியோ பிலிம்மிக்கு (வீடியோ படத்திற்கு) அனுமதி தேவையில்லை என்பதை நாம் அவர்களிடம் சுட்டிக் காட்டிய போது, வீடியோ பிலிம்மிற்கு அனுமதி தேவையில்லை தான். அதாவது தனிப்பட்ட இடங்கள் மற்றும் மண்டபத்திலோ அல்லது சனசமூக நிலையங்கள் போன்றவற்றிலோ அதனைத் திரையிடுவதில் எந்தவித பிரச்சினையுமில்லை. ஆனால் பதிவு செய்யப்பட்ட சினிமா அரங்கில் திரையிடும் போது அதற்கான அனுமதியை பெறப்பட்டிருக்க வேண்டும் என பொலீசார் தரப்பில் சுட்டிக காட்டப்பட்டது.

இதனையடுத்து திரைப்படத்தை பிரத்தியேகமாகப் பார்வையிட்ட பொலீசார் திரைப்படத்தை வெளியிட எந்தவித தடையுமில்லை என்றும் அதேவேளை அனுமதியைப் பெறுவதற்கு தற்போது விடுமுறை தினமாக இருப்பதனால் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அனுமதியை பெற்று மீண்டும் அதே திரையரங்கங்களில் வெளியிடலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியையும் எமக்குத் தெரிவித்தனர். எனவே ‘மாறு தடம்’ திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

அத்துடன் எமக்கு சகல வழிகளிலும் பங்களிப்பைச் செய்த திரைத்துறை நண்பர்களுக்கும், நேற்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஒத்துழைப்புக்களை நல்கியிருந்த அத்தனை உறவுகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றார்.

இத்திரைப்படம் தடுக்கப்பட்டதன் பின்னணி என்ன? என்று “அதிரடி” இணையம் மீண்டும் அவரிடம் கேட்ட போது,
“நாம் யாழ்ப்பாணத்தில் இருக்கும் திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து, அவர்களுக்குரிய மரியாதையினை வழங்கி அவர்களின் பங்களிப்புடனேயே இத் திரைப்படத்தை திரையிட ஆரம்பித்தோம்.

எனினும் யாழ் திரைத்துறையைச் சேர்ந்த ஒரு சிலர் இதற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் மறைமுகமாக ஈடுபட்டிருந்ததை அறிய முடிந்தது. இது குறித்து எமக்கு பொலீசாரும் தெரிவித்திருந்தனர். ஆனால் நாம் அதுபற்றி கவலைப்படவில்லை.

ஏனெனில் எந்த ஒரு துறையுமே போட்டிகள் நிறைந்தவையாகத் தான் இருக்கும். ஆயினும் இதனை ஒரு போட்டியாக கருதாமல் ஒரு நல்ல வெளிப்பாடாக ஏற்றுக் கொண்டு அதனை அனைவரும் பார்ப்பதற்கு உதவுவதோடு எமது வளர்ச்சிக்கும உதவ வேண்டுமென “அதிரடி” இணைத்தின் ஊடாக அனைவரையும் கேட்டுக் கொள்ளுகின்றேன்” என்றார்.
Thanks… “ATHIRADY.COM”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: