Home / இன்றைய செய்திகள் / மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்து: 7 பேர் வைத்தியாலையில்!!

மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்து: 7 பேர் வைத்தியாலையில்!!

1743461286accidenttveel precipice2பதுளை, தென்னகொல்ல, போகஹஅராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் ஐவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி குடைசாய்ந்தமையின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து ஏற்படும்போது முச்சக்கரவண்டியில் சாரதி, மாணவர்கள் ஐவர் மற்றும் ஆசிரியை ஒருவரும் பயணித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தென்னகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் மாணவர்கள் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: