Home / இன்றைய செய்திகள் / மாகாண ஆயுர்வேத ஆணையாளருக்கு அசிட் வீச்சு: மூவருக்கு நீதிமன்று அழைப்பு!!

மாகாண ஆயுர்வேத ஆணையாளருக்கு அசிட் வீச்சு: மூவருக்கு நீதிமன்று அழைப்பு!!

1940023134courtham2வட மத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் மீது அசிட் வீசி அவருடைய முகம் மற்றும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவரை அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜராகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத வைத்திர் ஒருவர், முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் மீன் வியாபாரி ஒருவர் ஆகிய மூவரையே நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வட மத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் அசிட் வீச்சுக்கு இலக்கானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: