Home / இன்றைய செய்திகள் / மந்திரப் பொருளாக மக்கள் வழிபட்ட 9,000 வருடங்கள் பழைமையான விண்கல்!!

மந்திரப் பொருளாக மக்கள் வழிபட்ட 9,000 வருடங்கள் பழைமையான விண்கல்!!

unnamed (2)மந்திரப் பொருளாக மக்கள் வழிபட்டுவந்த 9,000 வருடங்கள் பழைமையான விண்கல் ஒன்று போலந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அண்மையில் மீட்கப்பட்டுள்ளது.

போலந்து மற்றும் ஜேர்மனியின் எல்லைப் பகுதியில் உள்ள வரலாற்று முக்கியதுவமிக்க போமெரனியா பிராந்தியத்திலேயே இவ்விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றை தோண்டும்போது அங்கிருந்த சிறிய கூடாரமொன்றில் இக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு போலந்திலுள்ள தொல்பொருள் மற்றும் மனிதவியல் நிறுவனத்தில் தொல்பொருள் ஆய்வாளர்களே இவ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

இது வேறு ஒரு உலகத்தில் இருந்து வந்த கல் என அப்பகுதியிலுள்ள மக்கள் அறிந்திருந்ததுடன் அதனை வழிபடவும் செய்துள்ளனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல்லுடன் விண்கலினால் உருவாக்கப்பட்ட தாயத்துகள் உள்ளிட்ட மேலும் பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: