Home / இன்றைய செய்திகள் / போலி உறுதிகள் மூலம் காணி விற்பனையில் ஈடுபட்டவர் கைது!!

போலி உறுதிகள் மூலம் காணி விற்பனையில் ஈடுபட்டவர் கைது!!

20போலி உறுதிகளை தயார் செய்து காணி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் ராகம பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட காலமாக மேற்கொண்ட விசாரணைகளின்படி நேற்றையதினம் இவர் கைதாகியுள்ளார்.

இவ்வாறு போலி உறுதிகளைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 இலட்சம் ரூபாய்க்கும், இந்த வருடம் மார்ச் மாதம் 15 இலட்சம் ரூபாய்க்கும் இவர் காணிகளை விற்பனை செய்துள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

ரபத்த – மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த இவர் காணிகளை விற்றபின் ராகம பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரை குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: