Home / இன்றைய செய்திகள் / போர்நிறுத்தத்திற்கு முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரை கொன்ற இஸ்ரேல்!!

போர்நிறுத்தத்திற்கு முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரை கொன்ற இஸ்ரேல்!!

844532a7-d597-4593-bcff-2f26ff026bcd_S_secvpfஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நீடித்து வருகிறது. இதுவரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உள்பட 832 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 19 நாட்களாக நீடித்து வரும் இரு தரப்பு மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சி பலனளிக்கவில்லை.

ரமலான் நோன்புக் காலமாக உள்ளதால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கி சேமித்துக் கொள்ளவும், அவற்றை விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்கவும் வசதியாக இரு தரப்பினரும் சில மணி நேரங்களுக்காவது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தரப்பினரும் 12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன.

ஆனால், இந்த போர் நிறுத்தம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் பலியானார்கள். காசாவின் சுகாதார துறையின் செய்தித்தொடர்பாளரான அஷ்ரப் அல் கொய்த்ரா இத்தகவலை வெளியிட்டார். ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குண்டுவீச்சு தாக்குதலில் இடிந்து விழுந்த வீட்டிற்குள் சிக்கி அல்-நஜர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறந்ததாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: