Home / இன்றைய செய்திகள் / போரை உடனே நிறுத்துங்கள்: இஸ்ரேல்-பாலஸ்தீன அதிபர்களிடம் போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!!

போரை உடனே நிறுத்துங்கள்: இஸ்ரேல்-பாலஸ்தீன அதிபர்களிடம் போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!!

df6e48dc-42c3-47a6-a1c2-1566c2b3f4f8_S_secvpfகடந்த மாதம் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு பிணமாகக் கண்டெடுக்கப்பட்டதில் கோபமுற்ற இஸ்ரேல் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் மீது தொடுத்த தாக்குதலானது பதினோராவது நாளைத் தொட்டுள்ளது. இதுவரை பலியானோர்களின் எண்ணிக்கையும் 264 என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலை நிறுத்தக் கோரி வருகின்றன. நேற்று தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியபோது ஐ.நா. பொதுச்செயலரான பான் கி மூனும் பாலஸ்தீனிய மக்கள் தாக்கப்படுவதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலிடம் வலியுறுத்தினார்.

தான் பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வரும்போதும், பிராந்திய மற்றும் உலகத் தலைவர்களும் இந்தத் தாக்குதல் குறித்து தங்களின் கவலைகளை வெளிப்படுத்தி வரும்போதும் ஏற்கனவே ஆபத்தானதாகத் தோன்றும் இந்த யுத்தம் இன்னும் தீவிர நிலையை அடைந்துள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக இருக்கமுடியாது என்பதையும் மூன் தெரிவித்தார்.

இந்த நிலையில், வாடிகன் நகரத்திலிருந்து போப் பிரான்சிஸ் இஸ்ரேலிய அதிபர் சைமன் பெரேஸ் மற்றும் பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக வாடிகன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்டவர்களிடையே ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கவும், விரோதத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் வேண்டிய அவசியம் குறித்து போப் வலியுறுத்தினார் என்று வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: