Home / இன்றைய செய்திகள் / போதைப் பொருள் வழக்கில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களுக்கான தீர்ப்பு விரைவில்!!

போதைப் பொருள் வழக்கில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களுக்கான தீர்ப்பு விரைவில்!!

1151042333New3போதைப்பொருள் கடத்தியதாக 990 நாள்களாக இலங்கை சிறையில் வாடும், ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான வழக்கில் கொழும்பு நீதிமன்றம் ஒக்டோபர் 30ல் தீர்ப்பு வழங்க உள்ளது.

ராமேஸ்வரம், தங்கச்சிமடம் சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், எமர்சன், வில்சன், அகஸ்டஸ் ஆகியோர் 28.11.11ல் நடுக்கடலில் மீன்பிடித்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், போதை பொருள் கடத்தி வந்ததாக பொய் வழக்கு பதிந்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

உயர் விசாரணைக்காக, கொழும்பு 4வது மேல் நீதிமன்றில் வழக்கு நடந்தது. இதனால் மீனவர்களை கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களை சட்ட ரீதியாக விடுவிக்க, தமிழக அரசு ரூ.2 லட்சம் நிதியை, பாம்பன் மீனவர் சங்க தலைவர் யூ. அருளானந்திடம் வழங்கியது.

தமிழக மீனவர்களுக்காக வாதாடிய இலங்கை சட்டத்தரணி அனில்சில்வா, ´நடுக்கடலில் இலங்கை மீனவர், சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களும் படகுகளுடன் சந்திக்கவில்லை´ என்பதை, சேட்டிலைட் போட்டோ ஆதாரத்துடன் நீதிமன்றில் விளக்கினார்.

இதற்கு, இலங்கை அரசு தரப்பு சட்டத்தரணி, எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி சூரசேனா, வரும் அக்.30ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என, உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க, மத்திய அரசு வலியுறுத்தியதால், இலங்கை ஜனாதிபதி, போதை பொருள் வழக்கில் சிறையில் உள்ள 14 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.

ஆனால், சட்ட ரீதியான நடவடிக்கை மூலம் தான், 14 மீனவர்களை விடுவிக்க முடியும் என, இலங்கை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், ராஜபக்ஷ உத்தரவிட்டு 50 நாட்கள் ஆகியும், மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்திய, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான பிரதிநிதி யூ. அருளானந்தம் கூறியதாவது:

990 நாட்களாக சிறையில் வாடும் நமது மீனவர்களுக்காக வாதாடிய இலங்கை வக்கீல், மீனவர்கள் குற்றவாளி இல்லை என்பதற்காக, சேட்டிலைட் படம் உட்பட அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றில் விளக்கியுள்ளார். மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: