Home / இன்றைய செய்திகள் / பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்களே அதிகம் – ஸ்கொட் மொரிசன்!!

பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்களே அதிகம் – ஸ்கொட் மொரிசன்!!

1829324842s2தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகமானோர் பொருளாதாரப் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதுச்சேரி பிரதேசத்திலிருந்து அண்மையில் கடலில் வைத்து மீட்கப்பட்ட 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட நாட்களாக கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கு அவுஸ்திரேலியாவின் குர்டெய்ன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் விரைவில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்,

படகில் பயணித்த இந்திய பிரஜைகளை மீளவும் அழைத்துக் கொள்ள இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளது,

இந்தப் படகில் பயணித்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருந்த இலங்கையர்கள் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆபத்துக்கள் காரணமாக இவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரவில்லை எனவும் இவர்கள் பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்கள் எனவும் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: