Home / இன்றைய செய்திகள் / பொகவந்தலாவையில் விறகு சேகரிக்க சென்ற குடும்பஸ்தர் திடீர் மரணம்!!

பொகவந்தலாவையில் விறகு சேகரிக்க சென்ற குடும்பஸ்தர் திடீர் மரணம்!!

89504493dead-bodyபொகவந்தலாவை சூருளாங்கந்த காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற குடும்பஸத்தர் ஒருவர் திடீரென் உயிரிழந்தள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (19) பிற்பகல் 12 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் காட்டுப்பகுதியில் விழுந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த பிறகே உயிர் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் 06 பிள்ளைகளின் தந்தையான நவனிதன் என அடையாளம் காணபட்டுள்ளார்.

உயிரிழந்த நவனிதனின் மனைவி வெளிநாட்டில் பணி பெண்ணாக சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

தற்பொழுது சடலம் பொகவந்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.

சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: