Home / இன்றைய செய்திகள் / பெஷாவருக்கு மீண்டும் விமான சேவை: எமிரேட்ஸ் ஏர்வேஸ் அறிவிப்பு!!

பெஷாவருக்கு மீண்டும் விமான சேவை: எமிரேட்ஸ் ஏர்வேஸ் அறிவிப்பு!!

07a55867-5768-4762-9f8f-c3b0fecb8057_S_secvpfபாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமான நிலையத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி தரையிறங்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் மீது துப்பாக்கித் தாக்குதல் நடைபெற்றதில் ஒரு பெண் பயணி பலியானார். இருவர் காயமடைந்தனர்.

பெஷாவர் விமான நிலையத்தின் மீது தாக்குதல் தொடரும் என்ற பீதியால் பெஷாவருக்கான விமான சேவைகளை ரத்து செய்து கேத்தே பசிபிக், எமிரேட்ஸ், எதிஹாட் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் கடந்த மாதம் அறிவித்தன.

இதனையடுத்து, எந்த சர்வதேச விமானமும் பெஷாவரில் தரையிறங்கவில்லை. இந்நிலையில், நாளை காலை 9 மணியளவில் துபாயில் இருந்து பெஷாவர் நகருக்கு மீண்டும் விமான சேவை இயக்கப்படும் என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: