Home / இன்றைய செய்திகள் / புகழிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்!!

புகழிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்!!

1599311855Untitled-1அவுஸ்திரேலிய பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப் போவதில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகலிடக் கோரிக்கையாளர் ஆர்வலர்கள் உயர் நீதிமன்றில் வழக்கத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பைச் சென்றடைந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேர் கொண்ட படகு அவுஸ்திரேலிய பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: