Home / இன்றைய செய்திகள் / பாலர் வகுப்பு மாணவர்கள் 28 பேர் உட்பட 47 பேர் மீது குளவி தாக்குதல்!!

பாலர் வகுப்பு மாணவர்கள் 28 பேர் உட்பட 47 பேர் மீது குளவி தாக்குதல்!!

1719460462Tamil.3கதிர்காமம் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் மல்லிகாராம விகாரையில் நடத்திச் செல்லப்பட்ட பாலர் வகுப்பின் மாணர்கள் 28 பேர் உட்பட 47 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பாலர் வகுப்பு மாணவர்கள் 28 பேர், வயதானவர்கள் மூவர் மற்றும் பெண்கள் 16 பேரும் குளவி தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குளவி தாக்குதல் இன்று (22) முற்பகல் 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிறுவன் மற்றும் பெண் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர்கள் இருவரும் திஸ்ஸமகாராம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பாலர் வகுப்புக்கு முன்பாக இருந்த மா மரத்தில் கூடுகட்டியிருந்த குளவிகள் காற்றில் கலைந்ததன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: