Home / இன்றைய செய்திகள் / பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா 1500 ரூபா பிணையில் விடுதலை!!

பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா 1500 ரூபா பிணையில் விடுதலை!!

1154369773court2குருநாகல் – அம்பகொட 617 பிரிவு கிராம சேவகர் ஆனந்த விமலசிறி மீது தாக்குதல் நடத்திய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிமல் விஜேசிங்க என்றழைக்கப்படும் நில்வலா விஜேசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இன்று (22) குருநாகல் நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததன் பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இதன்படி 1500 ரூபா ரொக்கப் பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் இவர் விடுதலையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் விஜேசிங்கவை பொலிஸார் கைது செய்யச் சென்ற வேளையில் அவர் தான் வசிக்கும் வீடு மற்றும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று (21) தெரிவித்திருந்தார்.

ஆனந்த விமலசிறி என்ற கிராம சேவகர் கடந்த 19ஆம் திகதி தாக்குதலுக்கு இலக்காகினார்.

குறித்த கிராம சேவகரது பிரிவிலுள்ள பலா மரத்தை சட்டவிரோதமான முறையில் வெட்டிச் செல்வதாக தகவலறிந்த கிராம சேவகர் அவ்விடத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது அங்கிருந்தவர்கள் தாம் பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா விஜேசிங்கவின் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, கிராம சேவகரை கதைக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கிராம சேவகர் அதனை மறுத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் கிராம சேவகரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கியும் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: