Home / செய்திகள் / இந்திய செய்திகள் / பாகிஸ்தான் குழந்தைகளை காப்பாற்ற தூதரானார் அமிதாப் பச்சன்!!

பாகிஸ்தான் குழந்தைகளை காப்பாற்ற தூதரானார் அமிதாப் பச்சன்!!

1092242433Amitabh-Bachchanபோலியோ நோயை எதிர்த்து போராடி, அந்நோய்க்கு எதிரான பிரச்சாரங்களின் வாயிலாகவும், சொட்டு மருந்து போன்ற தடுப்பு முறைகளின் மூலமாகவும் போலியோவை வெற்றி கொண்டு இந்நோயை முற்றிலுமாக ஒழித்த நாடாக இந்தியாவை கடந்த மார்ச் மாதம் உலக சுகாதார கழகம் அறிவித்தது.

இதனையடுத்து, ’போலியோ ஒழிந்த நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய செய்தி. இதனையறிந்து நான் பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைகிறேன்’ என இந்தியாவின் ’சூப்பர் ஸ்டார்’ நடிகரும், போலியோவை ஒழிக்கும் முயற்சியில் கடந்த 10 அண்டுகளுக்கும் மேலாக சர்வதேச சிறுவர் நிதியமான ’யூனிசெஃப்’பின் நல்லெண்ண தூதராகவும் இருந்துவரும் அமிதாப் பச்சன் கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமிதாப் பச்சனிடம் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்னும் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் போலியோவில் இருந்து விடுபட முடியாமல் இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், ‘நமது நாடு போலியோவில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டது. இந்த முயற்சியை நாம் பாகிஸ்தான் போன்ற மற்ற அண்டை நாடுகளுக்கும் முன்னெடுத்து செல்ல வேண்டும். நல்ல காரியத்துக்கு தன்னார்வலராக பணியாற்ற நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.

பாகிஸ்தானில் இருந்து தகவல் வந்தால், போலியோ ஒழிப்பு தொடர்பாக ஒரு பிரசார திட்டம் தொடங்கப்பட்டால் பாகிஸ்தான் குழந்தைகளை காப்பாற்ற போலியோ விளம்பர தூதராக மாற நான் தயார்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: