Home / இன்றைய செய்திகள் / பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 14 பேர் பலி!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 14 பேர் பலி!!

e27b6374-74d0-4b48-97e2-4e1b1187e7c0_S_secvpfபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று அதிவேகமாகச் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது. மிர்பூரில் இருந்து பிமெர் மாவட்டம் சமானிக்கு சென்றுகொண்டிருந்த அந்த பஸ், ஒரு வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக விழுந்தது.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த 40 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மோசமான சாலைகள் மற்றும் போதிய பயிற்சியில்லாத டிரைவர்களால் பாகிஸ்தானில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: