Home / இன்றைய செய்திகள் / பாகிஸ்தானில் இம்ரான்கான் போராட்டத்தால் நவாஸ்செரீப் கலக்கம்!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் போராட்டத்தால் நவாஸ்செரீப் கலக்கம்!!

ad73556e-efae-422d-b2bc-e71c688dddec_S_secvpfபாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நவாஸ் செரீப் பிரதமராக பதவி வகிக்கிறார். இங்கு பிரதான எதிர்க்கட்சியாக பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளது.

அதற்கு அடுத்த பெரிய கட்சியாக கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெமக்ரிக் இ–இன்சாப் கட்சி உள்ளது. இக்கட்சி அரசுக்கு எதிராக பாகிஸ்தான் சுதந்திரமான ஆகஸ்டு 14–ந்தேதி மிகப் பெரிய போராட்டம் அறிவித்துள்ளது.

வருகிற 1–ந்தேதி லாகூரில் இருந்து மிகப் பிரமாண்டமான பேரணியாக புறப்பட்டு 14–ந்தேதி தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்துகின்றனர். லஞ்சம், ஊழலில் இருந்து நாட்டுக்கு விடுதலை அளிக்கும் போராட்டமாகவும், பாராளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் கூறி இப்போராட்டம் நடைபெறுகிறது.

இம்ரான்கானுக்கு தலிபான் தீவிரவாதிகளிள் ஆதரவு உள்ளது. அவர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என பிரதமர் நவாஸ்செரீப் கருதுகிறார். எனவே ஆகஸ்டு 1–ந்தேதி முதல் 3 மாதத்துக்கு தலைநகர் இஸ்லாமாபாத் பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இதன் மூலம் இம்ரான்கான் போராட்டத்தை பார்த்து நவாஸ் செரீப் கலக்கம் அடைந்துள்ளார். என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அரசியல் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அதை ராணுவத்திடம் பகிர்ந்து கொடுத்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

குறிப்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி பிரதமர் நவாஸ் செரீப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் அதிபர் ஆசிப் அலி சார்தாரியின் செய்தி தொடர்பாளர் பரக்துல்லா பாபர் கூறும் போது எங்களது கட்சி இதை எதிர்க்கிறது. அரசியல் சட்டம் 245–வது பிரிவின் கீழ் பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைப்பது தவறான செயலாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: