Home / இன்றைய செய்திகள் / பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 6 அல்கொய்தா தளபதிகள் பலி!!

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 6 அல்கொய்தா தளபதிகள் பலி!!

7beb66e9-e561-44da-a486-94e153b22c0a_S_secvpfபாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் வடக்கு வசிரிஸ்தானின் டட்டாகேல் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6 முக்கிய தளபதிகள் பலியானதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 10-ம் தேதியன்று நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் சவூதி அரேபியாவை சேர்ந்த அப்துல் மோஷின் அப்துல்லா இப்ராகிம் அல் ஷரிக் மற்றும் குவைத்தை சேர்ந்த மேலும் 5 பேர் என வசிரிஸ்தான் பகுதியில் அல் கொய்தா முக்கிய தளபதிகளாக இயங்கிய 6 பேர் பலியாகி விட்டதாக சிரியாவில் உள்ள அல் கொய்தா அமைப்பின் தலைவர் சனாபி அல் நஸ்ர் உறுதிபடுத்தியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் வசிரிஸ்தான் பகுதி தளபதியாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: