Home / இன்றைய செய்திகள் / நைஜீரியாவில் கடத்தப்பட்ட பெண்களின் பெற்றோர்களில் 11 பேர் மரணம்!!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பெண்களின் பெற்றோர்களில் 11 பேர் மரணம்!!

cdf0b00b-c4af-47d1-a0d3-cd8732e6ee1a_S_secvpfநைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோஹராம் தீவிரவாதிகள் அங்கு இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும் திட்டத்துடன் இயங்கி வருகின்றனர். மேற்கத்திய கல்வி தடை என்ற பொருள் கொண்ட இவர்களின் பெயருக்கு ஏற்றாற்போல் அங்குள்ள பெண்கள் படிப்பதை இவர்கள் தடை செய்துவருகின்றனர். கடந்த மார்ச் மாதம் சிபோக் என்ற சிற்றூரில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்துவந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கடத்திச் சென்றனர். இவர்களில் சிலர் மட்டுமே தப்பி வந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 219 மாணவிகளின் நிலை என்ன என்று தெரியவில்லை என்று அரசு கணக்கீடு தெரிவிக்கின்றது.

கடத்தல் நடந்து மூன்று மாதங்களுக்கும் மேலான நிலையில் இந்தப் பெண்களில் குறைந்தது 11 பேரின் பெற்றோர் இறந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் சிபோக்கின் அருகில் உள்ள கவுடகரி என்ற கிராமத்தில் போராளிகள் மேற்கொண்ட தாக்குதலில் பலியான 51 பேரின் உடல்கள் சிபோக் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அதில் இந்த மாணவிகள் ஏழு பேரின் தந்தையர்கள் இருந்ததாகவும் மருத்துவமனைத் தகவல்கள் குறிப்பிட்டன. மேலும் நான்கு பேர் இந்த கடத்தல் தந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் இன்ன பிற நோய்களால் இறந்ததாகவும் மக்கள் கூறினர்.

வாகனங்களுக்கு தீ வைத்து சாலைப் போக்குவரத்தை தடுப்பதால் சிபோக் தனித்து காணப்படுகின்றது. வர்த்தக விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதிகளில் தங்கள் பயணங்களைத் தடை செய்துள்ளன. அதுபோல் தனியார் விமானங்களும் இந்தப் பகுதியில் செயல்படுவதில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் போராளிகளால் அங்கு உணவுப் பொருள் பற்றாக்குறை, நிதி, எரிபொருள் பற்றாக்குறை போன்றவையும் தற்போது காணப்படுவதாக சமூகத் தலைவர் பிட்ரஸ் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட பெண்களிலும் இருவர் பாம்புக் கடியினால் இறந்துள்ளதாக தீவிரவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: