Home / இன்றைய செய்திகள் / நேபாள சுற்றுப்பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது: சுஷ்மா ஸ்வராஜ்!!

நேபாள சுற்றுப்பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது: சுஷ்மா ஸ்வராஜ்!!

5a4aa96d-f5e1-4aa1-b82b-f9542e94c627_S_secvpfநேபாள நாட்டிற்கு அரசு முறை பயணமாக வந்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அங்கு பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தோ-நேபாள தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். இதில் இரு தரப்பு உறவுகளையும் பலப்படுத்தும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

முக்கியமாக கடந்த 1950-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் ஆய்வு செய்து திருத்தங்களுடன் புதுப்பித்துக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு தொடர்பாக 1987-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கூட்டு ஆணையத்தை தொடர்வது என்று வாக்குறுதி அளித்த மஹேந்திரா பஹதூர் பாண்டே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர அங்கத்தினராக நேபாளம் ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் தனது நேபாள சுற்றுப்பயணம் தாம் எதிர்பார்த்ததை விட மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியிள்ளார். டெல்லி புறப்படுவதற்காக காத்மண்டு விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இக்கருத்தை தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் அந்நாட்டிற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அண்டை நாடுகளுடன் நட்புறவு பேணவேண்டும் என்பது மோடியின் முக்கிய குறிக்கோளாகும். குறிப்பாக பாகிஸ்தான் நாட்டுடனான உறவில் மிகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று மோடி விரும்புகிறார். அவரது இந்த நடவடிக்கையை அமெரிக்க அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: