Home / இன்றைய செய்திகள் / நாடு திரும்ப பணம் இன்றி தவித்த இலங்கை பாட்டி!!

நாடு திரும்ப பணம் இன்றி தவித்த இலங்கை பாட்டி!!

439294164helpinghand3சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கு பணம் இல்லாமல் தவித்த இலங்கை மூதாட்டிக்கு, தொண்டு நிறுவனம் மூலமாக மாவட்ட நிர்வாகம் உதவி செய்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் மேரிஜோசப் (70). கண் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக விமானம் மூலமாக அண்மையில் மதுரைக்கு வந்துள்ளார். அவர் எதிர்பார்த்ததைக்காட்டிலும் மருத்துவச் செலவு அதிகமானதால், கொண்டு வந்த பணம் செலவழிந்துவிட்டதாம்.

இந்நிலையில், இலங்கையில் இருக்கும் தனது மகளைத் தொடர்பு கொண்டிருக்கிறார். இருப்பினும் அங்கிருந்து அவருக்குப் பணம் கிடைக்கவில்லையாம். அங்குள்ள உறவினர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், உதவி கோரி மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகியிருக்கிறார்.

அங்கிருந்து மேரி ஜோசப் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், தனி வட்டாட்சியர் சரவணன் அவரிடம் விசாரணை நடத்தி, தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக இலங்கை திரும்பிச் செல்வதற்கான விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின்போது மேரி ஜோசப்பிடம், விமான டிக்கெட்டை ஆட்சியர் சுப்பிரமணியன் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: