Home / இன்றைய செய்திகள் / த.தே.கூட்டமைப்பினர் திருகோணமலைக்கு விஜயம்!!

த.தே.கூட்டமைப்பினர் திருகோணமலைக்கு விஜயம்!!

TNA_6திருகோணமலை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று சனிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க உறுதி மொழியளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக புல்மோட்டை பிரதேசத்திற்கான விஜயத்தினை இந்த குழுவினர் மேற்கொண்ட போது அங்குள்ள மக்கள் மீன்பிடித்துறையில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் காணி அபகரிப்பு மற்றும் அடக்கு முறை என்பன குறித்தும் இதன்போது விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து திரியாய் கிராமத்திற்குச் சென்றவர்கள் அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பிள்ளையார் கோயில் மற்றும் அம்மன் கோயில் ஆகிவற்றையும் பார்வையிட்டனர்.

தென்னமரவாடி கிராமத்தைப் பொறுத்தவரை அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்புக்கள் காலம் கடந்த நிலையில் உள்ளதாகவும் தங்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்துத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினரைக் கோரி உள்ளனர்.

இதேவேளை தங்கள் இடம்பெயர்ந்த நிலையில் தங்களுக்கு உரித்தான காணிகளில் சிங்கள மக்கள் விவசாயச் செய்கையினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் அந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: