Home / இன்றைய செய்திகள் / த்ரிஷா என்ன இப்படிக் கூறிவிட்டார்?

த்ரிஷா என்ன இப்படிக் கூறிவிட்டார்?

6767ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பிரச்சினை கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டு கிடக்கிறது. குறிப்பாக, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தற்போது முன்னணியில் இருக்கும் விஜய்-அஜீத்திற்கிடையே நடந்து கொண்டிருக்கிறது.

இதைப்பார்த்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கூறி வந்த சிம்புவும், இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறிவந்த தனுசும்கூட அந்த பட்டங்களை உதறி தள்ளி விட்டனர்.

ஆக, தற்போது விஜய்-அஜீத் இருவருக்கும்தான் நேரடிப்போட்டி நடக்கிறது. இதற்கிடையே வாரப்பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய்யே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறப்பட்டதால், இணையதளங்களில் விஜய்-அஜீத் இரசிகர்கள் காச் மூச் என்று கத்திக்கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், ஆகஸ்ட் 15-ம் திகதி மதுரையில் இரசிகர்கள் முன்னிலையில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டப்பட இருப்பதாக கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் புதிய செய்தி பரவிக்கிடக்கிறது.

இந்த சூழ்நிலையில், விஜய், அஜீத் இருவருடனும் நடித்த த்ரிஷாவிடம் சிலர் தொடர்பு கொண்டு, இந்த இருவரில் யாருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுக்கலாம் என்று கேட்டார்களாம். அதற்கு, என்னைக்கேட்டால், இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய், அஜீத் மட்டுமின்றி சூர்யா, விக்ரமுக்கும் கூட கொடுக்க வேண்டும்.
காரணம், என்னைப்பொறுத்தவரை இவர்கள் நான்கு பேருமே சூப்பர் ஸ்டார் நடிகர்கள்தான் என்று போட்டுத்தாக்கியிருக்கிறார்.

இதனால் ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாது என்று இப்போது இன்னும் இரண்டு நடிகர்களையும இந்த வம்பில் இழுத்து விடுகிறாரோ த்ரிஷா என்று அவரிடம் கருத்து கேட்டவர்கள், காதுகளைப் பொறுத்திக்கொண்டு ஓட்டம் பிடித்து விட்டார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: