Home / இன்றைய செய்திகள் / தென்கொரியா கடல்பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்படர் விபத்து: 5 பேர் பலி!!

தென்கொரியா கடல்பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்படர் விபத்து: 5 பேர் பலி!!

unnamed (8)தென்கொரியக் கடலில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதியன்று 476 பயணிகளுடன் சென்ற செவோல் என்ற படகு அதிக சுமை காரணமாகக் கவிழ்ந்தது. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் சென்ற அந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகினர். விபத்து நடந்து மூன்று மாதங்கள் கழிந்த நிலையிலும் ஒரு டஜனுக்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் இன்னமும் மீட்கப்படவில்லை.

இதுகுறித்த தேடுதல் வேட்டையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. யயூரோகாப்டர் டாபின் 2 என்ற ஏர்பஸ் நிறுவனத் தயாரிப்பான இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை கடற்கரைப் பகுதியில் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது.

அப்போது திடீரென விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டர் குடியிருப்புப் பகுதியான குவாங்ஜூ நகரத்தில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. காலை 11 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

ஆனால் இதில் பயணித்த ஐந்து பேரும் இறந்துவிட்டதாக கருதுகின்றோம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட உள்ளூர் தீயணைப்புத்துறைத் தலைவரான மூன் கி ஷிக் தெரிவித்தார். விபத்துக்கான காரணமும் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

தரையில் மோதிய ஹெலிகாப்டரால் எந்த இறப்பும் நேரிடவில்லை என்றும், அதிலிருந்து வீசியெறியப்பட்ட துண்டுகளினால் தாக்கப்பட்டு ஒரு மாணவன் காயமடைந்தான் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: